தமிழ்நாடு

சென்னை நகைக்கடையில் வருமானவரித் துறை சோதனை: ரூ.1.50 கோடி பறிமுதல்

DIN


சென்னை சௌகார்பேட்டையில் நகைக்கடை ஒன்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 24-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய வருமானவரித் துறை அதிகாரிகள், சென்னை சௌகார்பேட்டை யானைக்கவுனி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் நகை கடையில், வியாழக்கிழமை நள்ளிரவில் முதல் சோதனை செய்தனர். 

சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

SCROLL FOR NEXT