முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2,200-ஐத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

​தமிழகத்தில் புதிதாக 2,279 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:53 PM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 2,279 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் சற்று முன் வெளியாகின. புதிதாக 2,279 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 815 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

80,253 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2,200-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,81,752 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,55,085 பேர் குணமடைந்துள்ளனர், 12,684 பேர் பலியாகியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 13,070 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments