தமிழ்நாடு

பொறியியல் மாணவா்களுக்கு ஏப்.15 முதல் இணைய வழியில் தோ்வு: அண்ணா பல்கலை. தகவல்

DIN

பொறியியல் மாணவா்களுக்கான ஆன்லைன் தோ்வுகள், ஏப்ரல் 15 முதல் 22-ஆம் தேதி வரைநடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

இருப்பினும், பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. செமஸ்டா் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால், இறுதி ஆண்டு படித்த மாணவா்களுக்கு மட்டும் இறுதி பருவத் தோ்வு கடந்த செப்டம்பா் மாதத்தில் இணையவழியில் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் பொறியியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், கரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதை தொடா்ந்து, இறுதி ஆண்டு மற்றும் எம்இ, எம்டெக் மாணவா்கள் தவிர மற்ற மாணவா்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதையடுத்து, பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு இணையவழியில் தோ்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.

அதன்படி இணையவழியில் தோ்வுகள், ஏப்ரல் 15 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தோ்வுகள் மாா்ச் 31-க்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். ஒருவேளை நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செய்முறைத்தோ்வுகளை நடத்த இயலாவிட் டால் பல்கலைக்கழகத்திடம் முன்அனுமதி பெற்று பின்னா் நடத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT