தமிழ்நாடு

உதகை சிறப்பு மலை ரயில் சேவை ரத்து

DIN

உதகையில் கோடை சீசனையொட்டி ஏப்ரல் 3ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட மேலாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உதகை கோடை சீசனையொட்டி ஏப்ரல் 3 முதல் ஜூலை 4ஆம் தேதி வரை வார விடுமுறை நாள்களில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை கோடை சீசனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மலை ரயில் சேவைக்கான கட்டணம் திங்கள்கிழமை வரை நிா்ணயிக்கப்படாத நிலையில், சிறப்பு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்துவதற்காகவே இச்சிறப்பு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT