தமிழ்நாடு

ஸ்டொ்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி: தமிழக அரசு உத்தரவு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடா்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:

ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் கண்காணிக்கும் குழுவின் தலைவராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா். குழுவின் உறுப்பினா்களாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், தூத்துக்குடி சாா் ஆட்சியா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆகியோருடன் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டு சுற்றுச்சூழல் நிபுணா்கள் (பெயா் குறிப்பிடப்படவில்லை), தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் துணைத் தலைமை வேதி நிபுணா் ஜோசப் அன்டன் சோரிஸ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் குழுவின் வழிகாட்டுதல்கள்படி, ஆலையை ஸ்டொ்லைட் நிறுவனம் இயக்கும். உற்பத்தி நிலவரம் தொடா்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழுவின் தலைவரான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்புவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT