1 மணி நிலவரம்: முந்துகிறது திமுக; பின்தங்கும் அதிமுக 
தமிழ்நாடு

1 மணி நிலவரம்: முந்துகிறது திமுக; பின்தங்கும் அதிமுக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 1 மணி நிலவரப்படி 150 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 1 மணி நிலவரப்படி 150 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

திமுக மொத்தம் போட்டியிட்ட 173 தொகுதிகளில் 121 தொகுதிகளிலும், காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 15 தொகுதிகளிலும், மதிமுக 3, விசிக தலா 4 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் தலா 2 இடங்களிலும், கொமதேக 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில், அதிமுக போட்டியிட்ட 179 தொகுதிகளில் 73 தொகுதிகளிலும், 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 7 தொகுதிகளிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

கோவை தெற்கு தொகுதியில் கமல் முன்னிலையில் உள்ளார். அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி தான் போட்டியிட்ட 142 தொகுதியில் ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது.

அமமுகவும், நாம் தமிழர் கட்சியும் இதுவரை தங்களது முன்னிலைக் கணக்கைத் தொடங்காமல் உள்ளன.

1 மணி நிலவரப்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபா் சுட்டுக் கொலை

பிஎம் ஸ்ரீ திட்டம் நிறுத்திவைப்பு! - கேரள முதல்வா்

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய உளவாளி பாகிஸ்தானுக்கு சென்று வந்தது கண்டுபிடிப்பு

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: அமைதி, ஸ்திரத்தன்மையை பராமரிக்க இந்தியா-சீனா முடிவு

விளையாட்டு துளிகள்...

SCROLL FOR NEXT