முகப்பு
தமிழ்நாடு

தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக அமைச்சர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமைச்சர்களில் பலர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர்.

Updated On : 2 மே 2021, 9:53 pm IST
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமைச்சர்களில் பெரும்பாலானோர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர்.

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜிடம் வெல்லமண்டி நடராஜன் தோல்வியடைந்தார்.

ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சா.மு. நாசரிடம் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தோல்வியடைந்தார்.

Advertisement

Advertisement

ராஜபாளையம் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க பாண்டியனிடம் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வியைத் தழுவினார்.

இதேபோன்று ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சங்கரன் கோவில் தொகுதியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியடைந்தனர்.

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பெஞ்சமின் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியிடம் 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.