தமிழ்நாடு

தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் தற்போதைய நிலவரம் என்ன?

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் இதுவரை 217 தொகுதிகளுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. 

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் இதுவரை 217 தொகுதிகளுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 217 தொகுதிகளுக்கான முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில் திமுக 120 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 13 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. 

திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. விசிக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி, ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. 

அதிமுக 64 இடங்களில் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரு இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 3 இடங்களில் வெற்றி, 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

மொத்தமாக திமுக கூட்டணி 145 இடங்களில் வெற்றி, 14 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

அதிமுக கூட்டணி 72 இடங்களில் வெற்றி, மேலும் 3 தொகுதிகளில் முன்னிலை என்ற நிலையில் உள்ளது. 

தமிழகத்தில் இன்னும் 17 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 

திமுக 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடும் நிலையில் அடுத்த முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக முதல்முறையாக  பொறுப்பேற்க உள்ளாா். இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைய உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா் தகுதித் தோ்வு: உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக் கோரிக்கை

திண்டிவனம் தீா்த்தக் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வருவாய்த் துறை அலுவலா்கள் 2- ஆவது நாளாக வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு

ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

தகவல் பலகையில் காா் மோதி பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT