தமிழ்நாடு

முல்லைப் பெரியாற்றில் குளிக்க தடை:  கரோனா பரவல் எதிரொலி

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துவைக்கவோ மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை முதல் தடை விதித்துள்ளது.

DIN



கம்பம்: தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துவைக்கவோ மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை முதல் தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்திற்கு 4 ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பின்னர் பெரியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. லோயர் கேம்பில் ஆரம்பித்து குள்ளப்ப கவுண்டன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், சின்னமனூர், வீரபாண்டி வழியாக வைகை அணையை அடைகிறது.

தற்போது தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தொற்று பரவும் இடங்களான மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் அதிகப்படுத்தி உள்ளனர். 

இதன் காரணமாக கோடை காலம் என்பதால் முல்லைப் பெரியாற்றில் சிறுவர்கள், ஆண், பெண்கள் அதிகளவு குளிக்க வருவதை முன்னிட்டு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று கருதி புதன்கிழமை முதல் முல்லைப் பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துவைக்கவோ மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியப்படுத்தியுள்ளது. 

ஆற்றின் எல்லைகளில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் பொதுமக்கள் குளிப்பதை தடை செய்யும் நோக்கத்துடன் கண்காணித்து வருகின்றனர். இதற்கான அறிவிப்புகளை இளைஞர்களை ஆற்றில் வைத்துள்ளனர், ஊர்ப் பகுதிகளில் தண்டோரா மூலமும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT