தமிழ்நாடு

பதவியேற்பு விழாவில் தயாநிதி அழகிரி; கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி!

DIN

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 125 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. 

இதையடுத்து 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி கலந்துகொண்டார். நேற்று மு.க.அழகிரி, 'முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தம்பி ஸ்டாலினைப் பாா்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவாா்' என்று கூறியிருந்தார். 

மேலும் பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், முன்னாள் சபாநாயகர் தனபால், நவநீத கிருஷ்ணன், பாஜக சார்பில் இல.கணேசன் பங்கேற்றனர். 

காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன், வீரமணி, வேல்முருகன் உள்ளிட்ட  திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT