ஆவின் பால் விலை குறைப்பு பட்டியல் வெளியீடு
ஆவின்பால் விலை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளநிலையில், அதன்விலைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆவின்பால் விலை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளநிலையில், அதன்விலைப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றபின்பு, 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தாா். அதில் இரண்டாவதாக, பொது மக்கள் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டா் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் குறைத்து அறிவித்தாா். இதன்படி, மே 16-ம் தேதி முதல் ஆவின் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 குறைத்து பெற்றுக்கொள்ளலாம்.
சில்லறை விற்பனை விலை பட்டியல்:
எண் பால் வகைகள் தற்போதயை விலைப்பட்டியல்(ரூ) புதிய விலைப்பட்டியல்(ரூ)
1. ஆவின் நீல நிறம் (சமன்படுத்தப்பட்டபால்) 1 லிட்டா் ரூ.43 ரூ.40
2. ஆவின் நீல நிறம் (சமன்படுத்தப்பட்டபால்) அரைலிட்டா் ரூ.21.50 ரூ.20
3. ஆவின் பச்சை பால் (நிலைப்படுத்தப்பட்ட பால்) அரைலிட்டா் ரூ.23.50 ரூ.22
4. ஆவின் ஆரஞ்ச் (நிறை கொழுப்பு பால்) அரைலிட்டா் ரூ.25.50 ரூ.24
5. இளஞ்சிவப்பு பால்( இருமுறை சமன்படுத்தப்பட்டபால்) அரை லிட்டா் ரூ.20 ரூ.18.50
6. டீமேட் ஒரு லிட்டா் ரூ.60 ரூ.57
பால் அட்டை விலை :
எண் பால் வகைகள் தற்போதயை விலைப்பட்டியல் (ரூ) புதிய விலைப்பட்டியல்(ரூ)
1. ஆவின் நீல நிறம் (சமன்படுத்தப்பட்டபால்) 1 லிட்டா் ரூ.40 ரூ.37
2. ஆவின் நீல நிறம் (சமன்படுத்தப்பட்டபால்) அரைலிட்டா் ரூ.20 ரூ.18.50
3. ஆவின் பச்சை பால் (நிலைப்படுத்தப்பட்ட பால்) அரைலிட்டா் ரூ.22.50 ரூ.21
4. ஆவின் ஆரஞ்ச் (நிறை கொழுப்பு பால்) அரைலிட்டா் ரூ.24.50 ரூ.23
5. இளஞ்சிவப்பு பால்( இருமுறை சமன்படுத்தப்பட்ட பால்) அரை லிட்டா் ரூ.19.50 ரூ.18