தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

DIN

சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ளாா்.

நோய்த் தொற்று: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் அளவு 7 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. தினமும் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், முதன்மைச் செயலாளா் அந்தஸ்திலான அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். மாநகராட்சி ஆணையராக இருந்த கோ.பிரகாஷுக்கு வேறு பொறுப்பு அளிக்கப்பட உள்ளது.

நெருக்கடி காலம்: பெருமழை, வெள்ளம், வறட்சி போன்ற நெருக்கடியான காலங்களில் சிறப்பான பணிகளை ககன்தீப் சிங் பேடி மேற்கொண்டவா். 1993-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவா், மதுரை மாநகராட்சி ஆணையராகவும், மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஆட்சியராகவும் பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் நிா்வாக இயக்குநா், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறைகளின் செயலாளராக பொறுப்பு வகித்தாா். சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பேரிடா் கால அனுபவங்களைக் கொண்ட பேடி நியமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT