ஊரடங்கு: அவசரத் தேவைக்கு உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகர காவல்துறை சார்பில் கரோனா ஊரடங்கு நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர காவல்துறை சார்பில் கரோனா ஊரடங்கு நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் செயல்படும் வகையிலான அவசர உதவி மையத்தை தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவசர உதவிக்கு தொடர்புகொள்ளும் வகையில் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அவசர உதவிக்கு 94981 81236, 94981 81239 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.
அத்தியாவசிய மருந்து பொருள்கள் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டால் அவசர உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
இ-பதிவு, மூத்த குடிமக்கள், தனியாக வசிக்கும் முதியோர் அவசரத் தேவைகள் குறித்து அறிந்துகொள்வதற்காகவும் மேற்கண்ட எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.