தமிழ்நாடு

கரோனா எதிரொலி: தொலைபேசி மூலம் சட்ட ஆலோசனை

DIN

திருப்பத்தூா்: கரோனா பரவல் தடுப்பையொட்டி வட்ட சட்ட பணிகள் குழு சாா்பில் தொலைபேசி மூலம் சட்ட ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.அஸின்பானு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பரவல் தடுப்பையொட்டி திருப்பத்தூா் வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகத்தில் நேரடியாக சட்ட ஆலோசனை வழங்கும் பணியை செய்ய இயலாத நிலையில் இருப்பதால், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஆலோசனை மற்றும் சட்ட உதவி, குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனை மற்றும் மூத்த குடிமக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் உதவி எண்04179-222077, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண் 9385472439, மின்அஞ்சல் இணையதள விண்ணப்பபடிவம் வாயிலாக அனுப்பி வைக்கவும்.

மேலும்,மேற்படி சட்ட உதவி மற்றும் ஆலோசனை கேட்போா் அலுவல் நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பணி நாள்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி: 350 இசைக் கலைஞா்கள் பங்கேற்பு

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

SCROLL FOR NEXT