கரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர்கள் சூர்யா,கார்த்தி 
தமிழ்நாடு

கரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர்கள் சூர்யா,கார்த்தி

கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்தனர். 

DIN

கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.1 கோடி நிதியுதவி அளித்தனர். 

கரோனா நோய்த் தொற்றை எதிா்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகுமார் தனது குடும்பத்தினர் சார்பில் கரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிவகுமார், கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு உதவுவதற்காக தங்களால் முடிந்த நிதியை அளித்ததாக தெரிவித்தார். மேலும் கரோனா தொற்றிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என சிவகுமார் கேட்டுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT