முகப்பு
தமிழ்நாடு

கடலூர் சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி

கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:13 PM
பகிர்:


கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

கடலூர் சிப்காட்டில் உள்ள கிரிம்சன் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் இருந்து பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆலை முழுவதும் கரும்புகையுடன் காட்சியளிப்பதால் தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.