முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 
தமிழ்நாடு

முல்லை பெரியாறு அணைக்கு அதிக நீர்வரத்தால் மின்சார உற்பத்தி அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

DIN

கம்பம்: முல்லை பெரியாறு அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதேநரத்தில் லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்திலும் மின் உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை அதிகரித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணைப்பகுதியில் சனிக்கிழமை 53. 38 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 55 மில்லி மீட்டர் மழையும் பெய்தது இதனால் அணைக்குள் வினாடிக்கு 2,478 கனஅடி தண்ணீர் வந்தது. 

சனிக்கிழமை அணைக்குள் 1,385 கன அடி தண்ணீர் வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2,478 கன அடி தண்ணீர் வரப்பட்டு, தொடர் மழையால் கூடுதலாக, 1,093 கனஅடி தண்ணீர் வந்தது.

அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

இதன் எதிரொலியாக பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் முதல் மின்னாக்கி மூலம் முழு உற்பத்தி அளவான 42 மெகாவாட் உற்பத்தியும், இரண்டாவது மின்னாக்கி மூலம் 41 மெகா வாட் மின்சார உற்பத்தியும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மொத்தம் உள்ள 4 மின்னாக்கிகளில் சனிக்கிழமை முதல் தலா 23 மெகாவாட் என மொத்தம்  46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்ற நிலையில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், 37 மெகாவாட் கூடுதலாக உற்பத்தியாகி ஞாயிற்றுக்கிழமை மொத்தம்  83 மெகாவாட்டாக உற்பத்தி அதிகரித்தது.

அணை நிலவரம்:
நீர் மட்டம் 129.60 அடி உயரமாகவும், நீர் இருப்பு 4,611 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 2,478 கன அடியாகவும்,  நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கனஅடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... கோபம் போக்கும் திருஇடும்பாவனம் சற்குணநாதேசுவரர்!

இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகிறார்!

ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார் விஜய்: ஆா்.பி.உதயகுமாா்

தங்கம் விலை இன்று குறைந்தது!

மணப்பாறை சாா்-நிலை கருவூல அலுவலகத்தில் அலுவலா் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT