மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து சி.கே.குமரவேல் விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகுவதாக அறிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனிமனித பிம்பத்தை சார்ந்திருக்கிற அரசியலைவிடவும் மதச்சார்பற்ற ஜனநாயக பாதையில் பயணிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ள அவர், தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவரது வழிநடத்தலுமே மட்டுமே காரணம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணைத் தலைவர் மகேந்திரன், சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்மபிரியா, முருகானந்தம் உள்ளிட்டோர் விலகிய நிலையில் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.