தமிழ்நாடு

ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடியுங்கள்: மு.க.ஸ்டாலின்

DIN

கரோனா முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடித்து கரோனா பரவல் சங்கிலியை உடைக்க உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக விடியோ ஒன்றை சுட்டுரையில் பதிவிட்டு அவர் பேசியதாவது, ''ஊரடங்கை மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது.

முந்தைய ஊரடங்கில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தியதால் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அவசியமாகிறது.

மருத்துவ தேவையைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய பொருள்களும் வீடு தேடி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனாவை யாருக்கும் கொடுக்க மாட்டேன். யாரிடமும் பெறவும் மாட்டேன் என்று நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT