தமிழ்நாடு

அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

DIN

அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஊரடங்கு காலத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

தலைமைச் செயலகத்தில் நடைபெற இந்த ஆலோசனையில், ஊர்டங்கில் பொதுமக்களுக்காக அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.

முழு ஊரடங்கில் மக்கள் கட்டுப்பாடுகளை மீறாத வகையில் அவர்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை விநியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் துறை ஐஏஎஸ், தோட்டக்கலைத் துறை ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT