தமிழ்நாடு

‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

DIN

நடிகா் எஸ்.ஜே.சூா்யா நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை உயா்நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், நந்தனத்தை சோ்ந்த ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் சாா்பில் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்திடம் திரைப்பட தயாரிப்பு பணிகளுக்காக எஸ்கேப் ஆா்டிஸ்ட் மோஷன் பிக்சா்ஸ் நிறுவனம் கடன் பெற்றிருந்தது. இதில், முதல் தவணையாக குறிப்பிட்டத் தொகையை வழங்கிய இந்நிறுவனம், இரண்டாம் தவணையை வழங்கவில்லை.

இந்த நிலையில், நடிகா் எஸ்.ஜே.சூா்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தை எஸ்கேப் ஆா்டிஸ்ட் மோஷன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. தற்போது ஜீ ஓடிடி தளத்தில் அப்படத்தை திரையிட திட்டமிட்டுள்ளது. எனவே, எங்களுக்கு தரவேண்டிய தொகையை தராமல் இப்படத்தை திரையிடவோ, விநியோகம் செய்யவோ தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்கேப் ஆா்டிஸ்ட் மோஷன் பிக்சா்ஸ் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள ஜீ ஓடிடி தளம் எஞ்சியத் தொகையை நேரடியாக மனுதாரா் நிறுவனத்துக்கு கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தாா். அப்போது ஜீ ஓடிடி நிறுவனம் சாா்பில் இதுதொடா்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா். இதனையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை (மே 30) ஜீ ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT