தமிழ்நாடு

தீபாவளி கொண்டாட்டம்: பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி கரோனா மீண்டும் பரவாத வகையில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைவீதிகளில் பொருள்களையும், புத்தாடைகளையும் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 
கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கு பிறகும், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜைக்கு பின்பும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தது.

தமிழகத்தில் பண்டிகை காலத்திற்கு பிறகு மீண்டும் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாத விடியோ!

SCROLL FOR NEXT