தீபாவளி புகைமூட்டத்தால் திணறிய சென்னை: வாகன ஓட்டிகள் அவதி 
தமிழ்நாடு

தீபாவளி புகைமூட்டத்தால் திணறிய சென்னை: வாகன ஓட்டிகள் அவதி

தீபாவளி பண்டிகையையொட்டி மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவு பட்டாசுகளை வெடித்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகள் புகைமூட்டமாக காணப்பட்டன. 

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி மாலை நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவு பட்டாசுகளை வெடித்ததால் சென்னையில் பல்வேறு பகுதிகள் புகைமூட்டமாக காணப்பட்டன. 

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றபோதிலும் சாலைகளில் உள்ள மேடுபள்ளங்கள் தெரியாமல் சிரமமடைந்தனர்.

தீபாவளிக்கு காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் கட்டுப்பாடுகளை மீறி பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர். பட்டாசு வெடித்ததால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான குப்பைகள் சேர்ந்ததாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மாலையில் அதிக அளவிலான மக்கள் ஒரேநேரத்தில் பட்டாசுகளை வெடித்ததால், புகைமூட்டம் ஏற்பட்டது.

பல்வேறு இடங்களில் காற்று மாசு அபாயம் ஏற்பட்டது. சாலைகளின் பனிமூட்டம் போன்று புகைமூட்டம் காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT