தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே அனுமதியின்றி 15 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: வருவாய், காவல் துறையினர் விசாரணை

DIN


ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே உரிய அனுமதியின்றி சாலையோரம் இருந்த 15 பனை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து உள்ளனர். இதுதொடர்பாக வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில், பனை மரங்களை வெட்டுவதை தடுக்கும் நோக்கில் பனை மரங்களை உரிய அனுமதியின்றி வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம் நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட மேட்டு தெங்கல் சாலையோரம் ஓங்கி வளர்ந்திருந்த 15 பனை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து கடத்த முயன்றுள்ளனர். 

பனை மரங்களை வெட்டி சாய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் வருவாய்த் துறை வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் சிப்காட் காவல் துறையினர்.

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் வருவாய் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் வருவாய்த் துறை சார்பில் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் சிப்காட் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாலை ஓரம் ஓங்கி வளர்ந்திருந்த 15 பனை மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT