கோப்புப் படம் 
தமிழ்நாடு

நத்தம் அருகே சிறுவன் கொலை: மற்றொரு சிறுவன் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுவன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் மற்றோரு சிறுவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

DIN

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுவன் கொலைசெய்யப்பட்ட வழக்கில் மற்றோரு சிறுவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள கோட்டையூர்-சின்னையம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் ஹரிஹர தீபன் (8) 4ஆம் வகுப்பு படித்து வந்தார். ராமகிருஷ்ணன் தம்பதியர் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் மாடியில் சிறுவன்  ஹரிஹர தீபன் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்டு   ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம்  காவல்துறையினர்,  சிறுவனின் சடலத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே சின்னையம் பட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சிறுவன் ஹரிஹர தீபனை கொலை செய்தது தெரிய வந்தது. இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT