தமிழ்நாடு

கந்த சஷ்டி நிறைவு: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்

DIN

திருத்தணி: கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சீர்வரிசை.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சீர்வரிசை.

திருத்தணி முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது.  செவ்வாய்க்கிழமை உற்சவர் சண்முகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் புஷ்பாஞ்சலி நடந்தது. 

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சீர்வரிசை.

இன்று முருகன் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடந்தது. தொற்று காரணமாக பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் நின்று சுவாமியை வழிபட அனுமதிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை வழிபட்டனர். 

திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும் சண்முகர்.

இன்று  திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு அடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி, கோயில் பேக்ஷ்கார்கள் பழனி, வேலு மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT