சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
கந்த சஷ்டி அரங்கேறிய தலமான சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருக்கல்யாண உற்சவத்துடன், கந்தசஷ்டி விழா நிறைவு பெற்றது.
ஈரோடு: கந்த சஷ்டி அரங்கேறிய தலமான சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், திருக்கல்யாண உற்சவத்துடன், கந்தசஷ்டி விழா நிறைவு பெற்றது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 அளவில் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் கலசபூஜை மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் 5 நாட்களும் நடைபெற்று வந்தன.
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்வு இன்று நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையும் படிக்கலாமே.. வாட்ஸ்-ஆப்பில் பரவியது தவறான செய்தியாம்: தமிழக காவல்துறை அறிவிப்பு
பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் 5 நாள்களும் விரதமிருந்து காப்புக் கட்டியிருந்த பக்தர்கள் தங்களது காப்புகளை அவிழ்த்து கொண்டனர். இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.