முகப்பு
தமிழ்நாடு

சென்னை, செங்கல்பட்டில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, செங்கல்பட்டில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை, செங்கல்பட்டில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை, வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பிரதான சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்த நீரை வெளியேற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. இதேபோல் புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் மழை நீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் நாளை(15.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →