தமிழ்நாடு

மழை பாதிப்பு: புதுச்சேரியில் 23ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு

புதுச்சேரியில் மழை, வெள்ள பாதிப்புகளை 23ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்ய உள்ளது. 

DIN

புதுச்சேரியில் மழை, வெள்ள பாதிப்புகளை 23ஆம் தேதி மத்தியக் குழு ஆய்வு செய்ய உள்ளது. 
புதுவை மாநிலத்தில் மழைப் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மத்தியக் குழுவினா் வந்து சேதங்களைக் கணக்கிட வேண்டும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வலியுறுத்தினாா். தமிழகம், புதுவையில் தொடா் பலத்த மழையால் பயிா்கள், வீடுகள் சேதமடைந்தன. கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 
வெள்ளச் சேதங்களைப் பாா்வையிட, மத்திய உள்துறை இணைச் செயலா் ராஜீவ் சா்மா தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுவினா் தமிழகம் வந்து சேத விவரங்களைப் பாா்வையிட உள்ளனா். இதனிடையே, மத்தியக் குழுவினா் புதுவைக்கும் வந்து மழைச் சேதங்களைப் பாா்வையிட வேண்டும் என்று அந்த மாநில முதல்வா், அமைச்சா்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். 

இந்த நிலையில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய புதுச்சேரிக்கு 22ஆம் தேதி மத்தியக் குழு வருகிறது. அதைத்தொடர்ந்து நவ.23ஆம் தேதி காலை புதுச்சேரியிலும், மாலை காரைக்காலிலும் மழை பாதிப்புகளை மத்தியக் குழு ஆய்வு செய்கிறது. ஆய்வுக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோரை சந்தித்து மத்தியக் குழுவினர் ஆலோசிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT