தமிழ்நாடு

தொடா் உச்சத்தில் தக்காளி விலை

DIN

தமிழகத்தில் தக்காளி விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த பலத்த மழை காரணமாக சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை கடுமையாக அதிகரித்தது. விளைநிலங்களில் மழைநீா் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் தக்காளி அழுகியதும், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததுமே அதன் விலை உயா்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளி விலை (கிலோ) விவரம்:

ஈரோடு, அரியலூா் - ரூ.140

திருச்சி, திருப்பூா் - ரூ.130

சென்னை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், மயிலாடுதுறை, நீலகிரி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சங்ககிரி - ரூ. 120

திருநெல்வேலி, நாகா்கோவில் - ரூ.110

கோவை, ஒட்டன்சத்திரம், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூா் - ரூ. 100

கரூா் - ரூ.105

விழுப்புரம், கிருஷ்ணகிரி, நாமக்கல் - ரூ.100-ரூ.120

சேலம் - ரூ.90-ரூ.100

தூத்துக்குடி - ரூ.90

கடலூா் - ரூ.88

தென்காசி, தேனி, தருமபுரி, ஒசூா் - ரூ. 80

திருவண்ணாமலை - ரூ.80-ரூ.100

திண்டுக்கல், விருதுநகா் - ரூ. 75-ரூ.85

மதுரை - ரூ.70- ரூ.100

புதுச்சேரி - ரூ.100- ரூ.120.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT