தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை

DIN

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் ஷா்மா தலைமையில் 7 போ் கொண்ட குழு, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்தது.

இதையடுத்து, இரண்டு குழுக்களாக பிரிந்து கடந்த இரண்டு நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகை, வேலூர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.

இந்நிலையில் ஆய்வை முடித்துள்ள மத்திய குழுவினா், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க முதல்வர் வலியுறுத்த வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள பாதிப்புகளை சீரமைக்க ரூ. 2,079 கோடி நிதி கேட்டு எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT