விபத்துக்குள்ளான பேருந்து 
தமிழ்நாடு

அவிநாசி அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை அதிகாலை படுகாயமடைந்தனர். 

DIN

அவிநாசி: அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை அதிகாலை படுகாயமடைந்தனர். 

பெங்களூரில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோவை-சேலம் ஆறு வழிச்சாலை அவிநாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வரும்போது சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அவிநாசி அருகே எம். நாதம்பாளையத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று இந்தியா ஓபன் 2026 பாட்மின்டன் தொடக்கம்: 256 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு!

சுஸுகி மோட்டாா்சைக்கிள் விற்பனை 26% உயா்வு!

253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: மிதிவண்டி வழங்கினாா்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, நவாரோ!

டிசிஎஸ் நிகர லாபம் 14% சரிவு!

SCROLL FOR NEXT