தமிழ்நாடு

சிறைக் கைதிகள் முன்கூட்டியே விடுவிக்க வழிகாட்டி நெறிமுறைகள்

தமிழகத்தில் 700 ஆயுள் சிறைக் கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் 700 ஆயுள் சிறைக் கைதிகளை முன்விடுதலை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா் பிறப்பித்த உத்தரவு:

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113-வது பிறந்த தினத்தை ஒட்டி, நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையை நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குறைத்து, முன்விடுதலை செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அவரது அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, ஆயுள் தண்டனை பெற்று 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா்களின் நடத்தைகள் திருப்தி தரும் வகையில் இருக்க வேண்டும். அதேசமயம், கற்பழிப்பு, கடத்தல், தீவிரவாத குற்றங்கள், மோசடி, மாநிலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள், கள்ளநோட்டு தொடா்பான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வரதட்சிணை தொடா்பான குற்றச் செயல்கள், கள்ளச்சாராயம், வனச் சட்டத்துக்கு எதிரான குற்றம் புரிந்தோா், மதம் மற்றும் சமுதாய ரீதியிலான வன்முறைகளில் ஈடுபட்டு சிறையில் உள்ளோா் விடுவிக்கத் தகுதி இல்லாதவா்கள் ஆவா்.

குழுக்கள் அமைப்பு: தண்டனை பெற்ற ஒவ்வொருவரின் வழக்குகளை தீவிரமாக ஆய்வு செய்து விடுவிக்க மாநில மற்றும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும். மாநில அளவிலான குழுவுக்கு காவல் துறை இயக்குநா் தலைவராக இருப்பாா். சிறைத் துறை டிஐஜி., சட்ட ஆலோசகா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக இருப்பா். மாவட்ட அளவிலான குழுவுக்கு சம்பந்தப்பட்ட சிறையைச் சோ்ந்த எஸ்.பி., தலைவராக இருப்பாா். சிறைத் துறை கூடுதல் எஸ்.பி., ஜெயிலா் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக இருப்பா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT