புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் இடிந்து விழுந்து சேதமடைந்த வீட்டின் சுவர்கள். 
தமிழ்நாடு

புதுச்சேரியில் திடீர் வெடி விபத்து: வீட்டிலிருந்து 8 பேர் காயம்

புதுச்சேரியில் வீட்டில் சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் வீட்டிலிருந்து 8 பேர் காயமடைந்தனர். 

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டில் சனிக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் வீட்டிலிருந்து 8 பேர் காயமடைந்தனர். 

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜோதி. இவர்களது வீட்டில் சனிக்கிழமை காலை 6:30  மணி அளவில்  திடீரென வெடி சத்தத்துடன் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

வெடி விபத்தில் வீட்டிலிருந்த சீனிவாசன், ஜோதி, மகள் எழிலரசி மற்றும் பேரக்குழந்தைகள் ஆகியோர் காயமடைந்தனர்.

மேலும் வீட்டின் அருகே இருந்த அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 3 பேர் என எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இதில், பலத்த காயங்களுடன் சீனிவாசன் உள்ளிட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து குறித்து தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு வெடி ஏதேனும் வெடித்ததா? என்ன நடந்தது என தெரியாத நிலையில், விபத்து தொடர்பாக மர்மம் நீடிப்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT