திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன். 
தமிழ்நாடு

குடியிருப்புகளில் புகுந்த மழை நீர் வெளியேற்றக்கோரி சாலை மறியல்

குடியிருப்புகளில் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

DIN


திருவள்ளூர்: குடியிருப்புகளில் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே தண்ணீர்குளம், ராமாபுரம் கிராமங்களில் 1000- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாடள்களாக பெய்து வந்த கனமழையால் 500 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டிற்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மழை நீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக வேண்டும். இதை வலியுறுத்தி திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் ராமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் கிராமிய காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

இதனைத்தொடர்ந்து பொதுமக்கள்  அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மழைக்கு இடையே வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT