முகப்பு
தமிழ்நாடு

கோயம்பேடு சந்தை வியாபாரிகளுக்கு 5,000 துணிப் பைகள்

தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள், பொதுமக்களுக்கு 5,000 துணிப் பைகள் சனிக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி, தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள், பொதுமக்களுக்கு 5,000 துணிப் பைகள் சனிக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட கோயம்பேடு காற்கறி சந்தையில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்ப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சுற்றுச்சூழல், வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ, சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நெகிழிப் பயன்பாட்டால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அதற்கு மாற்றாகப் பயன்படுத்தபட வேண்டிய பொருள்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி மற்றும் உத்கா்ஷ் குளோபல் ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு 5,000 துணிப் பைகள் இலவசமாக வழங்கப்பட்டன. அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் பொருள்கள் மற்றும் அதற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டதுடன், அதுகுறித்து துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், துணை ஆணையா்கள் எஸ்.மனிஷ், ஷரண்யா அரி, மாநகர நல அலுவலா் டாக்டா் எம்.ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →