சங்ககிரியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், லால்பகதூர்சாஸ்திரி ஆகியோர் உருவப்படங்களுக்கு சனிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்துகிறார் சி. எஸ். ஜெய்க்குமார். 
தமிழ்நாடு

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சங்ககிரியில் காந்தி ஜெயந்தி விழா

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூர்சாஸ்திரி ஆகியோர் பிறந்தநாள் விழா  சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தியடிகள், லால்பகதூர்சாஸ்திரி ஆகியோர் பிறந்தநாள் விழா  சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி. எஸ். ஜெய்க்குமார் தலைமை வகித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனையடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.  

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் அமைப்பின் சங்ககிரி வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.ராமமூர்தத்தி முன்னிலை வகித்தார். சங்ககிரி ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் பி.சி.மணி, முன்னாள் மாநில பொது செயலர் கே.நடராஜன்,  முன்னாள் நகரத்தலைவர்கள் அண்ணாமலை, காசிலிங்கம், நிர்வாகிகள் ரவி, அங்கமுத்து, காமராஜ், ஐன்டியூசி நிர்வாகி சின்னுசாமி, ஆறுமுகம், கிரிசங்கர், சந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.அகில்பிரணேஷ், ஜெ.வெஸ்லிபிரைட், கே.கேப்ரியல்பிரவீன்குமார், ஆர்.சுரேந்தர், ஆர்.ரியாஸ், ஆர்.லோகேஷ், ஆர்.ராகுல்  உள்ளிட்ட  பலர் இதில் கலந்து கொண்டனர். 

விழா முடிவில் காமராஜர் நினைவு தினம் அனுஷ்சரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT