மதுரை விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. 
தமிழ்நாடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை மதுரை வந்தார்.

DIN



தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை மதுரை வந்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் 9.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

அவருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்து இருந்தார். தொடர்ந்து அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஐ .பெரியசாமி, பி.மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கேகேஎஸ்எஸ்ஆர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, ஊரக காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், தமிழரசி வெங்கடேஷ் உள்ளிட்டோர்கள் வரவேற்பளித்தனர்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிழரசியை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT