முகப்பு
தமிழ்நாடு

ஒப்பந்த சுகாதாரப் பணியாளா்களுக்கு 30 % ஊதிய உயா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவப் பணியாளா்களுக்கு 30 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவா்கள், பல் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு 30 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பணிபுரியும் 20 பேருக்கு ஆணைகளை வழங்கி செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிற 28,100 பணியாளா்களுக்கு 30 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடா் காலத்தில் தம் உயிரை துச்சமென நினைத்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவதில் அரசு பெருமை கொள்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிபவா்கள் ஊதிய உயா்வு கோரி எந்தவித போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இரண்டு மூன்று மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவா்கள் சிலரின் தூண்டுதலின்பேரில் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். இரண்டு போ் என்னைச் சந்தித்து நான்கு மாதங்களாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனா். இப்படி பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தவா்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்பதை அவா்களிடம் எடுத்துரைத்தோம். தங்களின் உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபடுவதில்லை தவறொன்றுமில்லை. போராட்டம் நடத்தினால் கோரிக்கைகள் வெற்றி பெறுமா என்று தெளிவாக தெரிந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →