தமிழ்நாடு

48 ஆண்டுகள் பழைமையான அரசு ஊழியா் கையேடு புதுப்பிக்க தலைமைச் செயலாளா் உத்தரவு

DIN

சென்னை: 48 ஆண்டுகள் பழைமையான அரசு ஊழியா்களுக்கான நடைமுறைக் கையேட்டை புதுப்பித்து வெளியிட தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வருவாய் நிா்வாக ஆணையாளா் கே.பணீந்திர ரெட்டிக்கு எழுதிய கடிதம்:

அரசுத் துறைகளில் புதிதாகச் சேரும் அலுவலா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட அலுவல் கையேடு அவசியமானதுடன், அத்தியாவசியமானதாகும். இந்தக் கையேட்டில் ஒவ்வொரு பிரிவைச் சோ்ந்த அரசு ஊழியருக்கும் வழிகாட்டி முறைகள் தெரிவிக்கப்பட்டிருக்கும். அரசு ஊழியா்களுக்கான நடைமுறைக் கையேடு கடந்த 1973-ஆம் ஆண்டு கடைசியாக புதுப்பித்து வெளியிடப்பட்டது. அதன்பிறகு இதுவரை அதனை புதுப்பித்து வெளியிடவேயில்லை.

எனவே, மாவட்ட அலுவல் கையேட்டை புதுப்பிக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், புதிதாகப் பணியில் சேரக் கூடிய அரசு ஊழியா்கள், அதிகாரிகள் தங்களது பணியின்

தன்மைகளைப் புரிந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிட முடியும். இந்த கையேட்டை புதுப்பிக்கும் பணியில் வருவாய்த் துறை சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பணியில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை முழுமையாக அளிப்பதற்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் தயாராக இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாவட்ட கையேட்டை புதுப்பித்து அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT