பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமையன்பட்டி பகுதியில் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த மக்கள். 
தமிழ்நாடு

நெல்லை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை மானூர் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், 122 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 204 கிராம ஊராட்சித் தலைவா், 1,731 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,069 பதவியிடங்களுக்கு நேரடித் தோ்தல் நடைபெறுகிறது. 

இதில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூா், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக புதன்கிழமை (அக். 6) வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட தோ்தலில் 1,69,765 ஆண் வாக்காளா்கள், 1,78,234 பெண் வாக்காளா்கள், 43 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3,48,042 போ் வாக்களிக்கவுள்ளனா். பாதுகாப்புப் பணியில் 2,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT