தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு

DIN

விழுப்புரம், வேலூா், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை (அக்.9) நடைபெறுவதையொட்டி, அதற்கான இடங்களில் இன்று மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் முதல்கட்டமாக அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைந்தது. இரண்டாம் கட்டத் தேர்தலானது சனிக்கிழமை (அக். 9) நடக்கவுள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தலில், 9 மாவட்டங்களில் 35 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 62 ஊராட்சி வார்டு, 626 ஊராட்சி ஒன்றிய வார்டு, 1,324 கிராம ஊராட்சித் தலைவர், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் இடங்களுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

மேலும் மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு தொடர்பில்லாத நபர்கள் ஊராட்சிகளைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மதுபானக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT