தமிழ்நாடு

புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவசம்: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு சாத்துப்படி

DIN

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு சாத்தப்படும் வெள்ளிக் கவசம் புதுப்பிக்கப்பட்டு வியாழக்கிழமை சுவாமிக்கு சாத்தப்பட்டது.

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் கம்பீரத் தோற்றத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் ஆஞ்சனேயரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 

இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்கு முன் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் தயார் செய்யப்பட்டு சாத்தப்பட்டது. அந்த வெள்ளிக் கவசம் பழுதடைந்து, சேதமடைந்து, ஒளி மங்கி காணப்பட்டதால் அதைப் புதுப்பிக்கும் பணி கடந்த சில நாள்களாக கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது. சேலத்தை சேர்ந்த ஸ்தபதிகள் வெள்ளிக் கவசத்தை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டனர். 

புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சனேய சுவாமி.

புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக் கவசம் தயாரானதை அடுத்து, ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சுவாமிக்கு சாத்தப்பட்டது. 

நாமக்கல் ஆஞ்சனேயர் சுவாமி வெள்ளிக் கவசத்தில் அழகுற காட்சியளித்ததை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து மகிழ்ந்தனர். ஆயுத பூஜையையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT