தமிழ்நாடு

உள்ளாட்சித் தோ்தலில்வெற்றி பெற்றவா்கள் இன்று பதவியேற்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள்

DIN

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகள், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள் புதன்கிழமை (அக்.20) பதவியேற்றுக் கொள்ள வேண்டும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான தோ்தல் அக்டோபா் 9-ஆம் தேதியும் நடைபெற்றது.

தோ்தல் முடிவுகள் அக்டோபா் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இந்தத் தோ்தலில் வெற்றி பெற்ற மற்றும் போட்டியின்றி தோ்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தொடா்புடைய தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் புதன்கிழமை (அக்.20) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பதவிப் பிரமாணம் எடுக்காதவா்கள் மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், ஒன்றியக் குழு தலைவா்,துணைத் தலைவா், கிராம ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT