கோப்புப்படம் 
தமிழ்நாடு

புழல் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

DIN


வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் முதல்வர் புழல் ஏரியை ஆய்வு செய்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு மாநிலத்தில் பரவலாக கனமழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், புழல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

ஏரியின் நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆகாய தாமரையை அகற்றவும், கரையை பலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

புழல் ஏரியின் மொத்த கொள்ளவு 3.30 டி.எம்.சி.யில் தற்போது 2.77 டி.எம்.டி. தண்ணீர் உள்ளது. 

1999 இல் அன்றைய முதல்வர் கருணாநிதி புழல் ஏரியை ஆய்வு செய்தார். தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் ஏரியை ஆய்வு செய்துள்ளார். 

முதல்வருடன் அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT