தமிழகத்தில் 1,127-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 1,127 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 146 பேருக்கும், கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 96 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,127 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 146 பேருக்கும், கோவையில் 128 பேருக்கும், செங்கல்பட்டில் 96 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 95,216-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 1,358 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.46 லட்சத்தைக் கடந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 13,034 போ் உள்ளனா்.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,019-ஆக அதிகரித்துள்ளது.