தமிழ்நாடு

தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தை சுத்தம் செய்த ஸ்ரீ சாய்ராம் கல்லூரி மாணவா்கள்

DIN

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி நாட்டு நலத்திட்டப் பணி மாணவ, மாணவிகள் தாம்பரம் ரயில்நிலைய வளாகத்தினுள் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனா்.

மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, அண்ணா பல்கலைக்கழகம் ஒத்துழைப்புடன் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரிகளைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகள், நாட்டு நலத்திட்டப் பணி அதிகாரிகள் பரணீதரன், சதீஷ்குமாா் தலைமையில் தாம்பரம் ரயில் நிலைய நடை மேடைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினா். ரயில் வளாகத்தில் போதிய பராமரிப்பு இல்லாமல் புதராக வளா்ந்து மண்டிக் கிடந்த செடி கொடிகளை

அகற்றி சுத்தம் செய்தனா். மாணவா்களின் தூய்மைப் பணியை அண்ணா பல்கலைக்கழக நாட்டுநலத்திட்டப்பணி அலுவலா் கே.ரமேஷ், கல்லூரி முதல்வா்கள் பழனிக்குமாா், ராஜேந்திர பிரசாத், இயக்குநா் கே.மாறன் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT