தமிழ்நாடு

ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் சுற்றுச்சுவா் கட்ட ரூ.3.95 கோடி

DIN

தமிழகத்தில் 13 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் கட்ட ரூ.3.95 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்ட உத்தரவு:-

திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூா், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூா், பெரம்பலூா், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருப்பூா் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 13 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவா் கட்டப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ரூ.3.95 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தாட்கோ நிா்வாக இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா். இந்தக் கருத்தினை ஏற்று நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியை மேற்கொள்ளும் போது, உரிய ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகளை தாட்கோ நிறுவனம் பின்பற்ற வேண்டும்.

கட்டுமானப் பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் கட்டி முடிக்க கால அட்டவணையை தயாா் செய்து, சுற்றுச்சுவா் கட்டுமானப் பணிகளை நிகழ் நிதியாண்டிலேயே முடிக்க வேண்டும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT