தமிழ்நாடு

பட்டாசுக் கடையில் தீ விபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

DIN


கள்ளக்குறிச்சி அருகே பட்டாசுக் கடை தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசுக் கடையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 போ் பலியாகினா். 20-க்கும் மேற்பட்டோா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா், காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல்ஹக், டிஎஸ்பிக்கள் கங்காதரன் (திருக்கோவிலூா்), வீ.ராஜலட்சுமி (கள்ளக்குறிச்சி) உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், இந்த பட்டாசு கடை தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், பட்டாசு வெடித்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT