தமிழ்நாடு

வாழப்பாடியில் கண்ணதாசன் நினைவு கருத்தரங்கம்

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி இலக்கியப்பேரவையில் கண்ணதாசன் நினைவு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

வாழப்பாடி இராஜன் கணினி அச்சகத்தில் 467வது கூட்டம், கண்ணதாசன் நினைவு கருத்தரங்கமாக ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.  இக்கருத்தரங்கிற்கு, இலக்கியப் பேரவை துணைத்தலைவர் மா.கணேசன் வகித்தார்.

இலக்கியப் பேரவை செயலாளர் சிவ.எம்கோ வரவேற்றார். ஆய்வறிஞர் சுப்பிரமணியம் தொடக்க உரையாற்றினார். மறைந்த கவிஞர் கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள், கவிதைகள், சுயசரிதை, வனவாசம் அர்த்தமுள்ள இந்து மதம் ஆகியவை குறித்து, கவிஞர் சண்முகசுந்தரம், ஆசிரியர்கள் ராஜேந்திரன், காட்டுக்கோட்டை கணேசன், சுகமணியன், பழனிவேலு, ஆடிட்டர் குப்பமுத்து, கவிஞர்.செல்வக்குமார், மதுரம் ராஜ்குமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்.

எதிர்வரும் நவம்பர் 14ல் குழந்தைகள் தினத்தையொட்டி, குழந்தைகளின் கருத்தரங்கம், விவாதமேடை நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை மாகாணம் தமிழ்நாடாக அறிவிக்கப்பட்ட ஜூலை 18, தமிழக தினமாக அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவாக, இலக்கியப் பேரவை தாளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT